Anbe Anbe Anbe song from Christian movie
devotionalJune 2019

Anbe Anbe Anbe

Music
Lyrics

Anbe Anbe Anbe Lyrics

அன்பே! அன்பே! அன்பே!
ஆருயிர் உறவே,
ஆனந்தம்! ஆனந்தமே!
ஒருநாள் உம்தயை கண்டேனையா,
அந்நாளென்னை வெறுத்தேனையா,
உம் தயை பெரிதையா - என்மேல்
உம் தயை பெரிதையா.
பரலோகத்தின் அருமைப் பொருளே,
நரலோகரிலன்பேனையா?
ஆழம் அறிவேனோ - அன்பின்
ஆழம் அறிவேனோ?
அலைந்தேன் பலநாள் உமையுமறியா
மறந்தே திரிந்த துரோகியை
அணைத்தீர் அன்பாலே - எனையும்
அணைத்தீர் அன்பாலே.
பரலோகத்தின் பொருளின் மகிமை
அழியும் புல்லின் பசுவைப்போல்
வாடாதே ஐயா - அன்பு
வாடாதே ஐயா.
இப்பாரினில் உம் அன்பின் இனிமை
இயம்பற்கியலாதாகில் யான்
இசைக்கவும் எளிதாமோ - பரத்தில்
இசைக்கவும் எளிதாமோ!