
Deva Saayal Aaga
Deva Saayal Aaga Lyrics
தேவசாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் - நானும்
அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே
நம் விண்ணவர் சாயல் அடைவேன்
பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழித்திடுமே
கை வேலையல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன்
சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார்
ஆவியின் அச்சார மீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே
காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து
ஜீவக்கிரீடம் பெற்றிடுவேன்
மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே
உன்னத சீயோன் மலைமேல்
எனதருமை இயேசுவுடன்
ஜெபவீட்டினிலே மகிழ்ந்தே
நான் ஜீவிப்பேனே நீடுழியே