Entha Kaalathilum song from Christian movie
devotionalJune 2019

Entha Kaalathilum

Music
Lyrics

Entha Kaalathilum Lyrics

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
யேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்
ஆதியும் நீரே - அந்தமும் நீரே
ஜோதியும் நீரே - என் சொந்தமும் நீரே
எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
தாய் தந்தை நீரே - தாதியும் நீரே
தாபரம் நீரே - என் தாரகம் நீரே
எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
வாதையில் நீரே - என் பாதையில் நீரே
எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
வானிலும் நீரே - பூவிலும் நீரே
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே
எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் - மாறாதவர் நீரே
எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
தேவனும் நீரே - என் ஜ“வனும் நீரே
ராஜராஜனாம்- என் சர்வமும் நீரே
எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்