
Enthan Jebavelai
Enthan Jebavelai Lyrics
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன்
சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன்
உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே
நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை
மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா
நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீர் ஜெபம் கேளுமே கருணையின் பிரவாகம் நீரே