
Idukkamaana Vaasal
Idukkamaana Vaasal Lyrics
இடுக்கமான வாசல் வழியே
வருந்தி நுழைய முயன்றிடுவோம்
சிலுவை சுமந்து இயேசுவின் பின்
சிரித்த முகமாய் சென்றிடுவோம்
வாழ்வுக்கு செல்லும்
வாசல் இடுக்கமானது
பரலோகம் செல்லும்
பாதை குறுகலானது - சிலுவை
நாம் காணும் இந்த உலகம்
ஒருநாள் மறைந்திடும்
புது வானம் பூமி நோக்கி
பயணம் செய்கின்றோம்
இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
சிலகாலம் தான் நீடிக்கும்
இணையில்லாத மகிமை
இனிமேல் நமக்குண்டு
அழிவுக்கு செல்லும் வாயில்
மிகவும் அகன்றது
பாதாளம் செல்லும் பாதை
மிகவும் விரிந்தது