Jeyam Jeyam Jeyam song from Christian movie
devotionalJune 2019

Jeyam Jeyam Jeyam

Music
Lyrics

Jeyam Jeyam Jeyam Lyrics

ஜெயம் ஜெயம் ஜெயம்
ஜெயம் ஜெயம் நமக்கு
இயேசு இருக்கையில் பயம் எதற்கு
மலைகள் விலகினாலும்
பர்வதங்கள் பெயர்ந்தாலும்
உன்னை விட்டு விலகாதவர்
உடன்படிக்கையின் தேவன்!
வல்லமையின் ராஜா!
அவர் சேனைகளின் கர்த்தர்!
அக்கினி இறங்கிடும்
அந்தகாரம் அழிந்திடும்
ஆவியின் பெலன் கூடும்
பெலத்தினால் அல்ல
பராக்கிரமம் அல்ல
தேவனாலே ஆகும்
என் தேவனாலே ஆகும்
சாத்தானை ஜெயிக்க
சாபத்தை அழிக்க
வல்லமை இறங்கிடுதே
சிலுவையில் இரத்தம் சிந்திய இயேசு
எனக்காய் யுத்தம் செய்குவார் அவர்
எனக்காய் யுத்தம் செய்குவார்