Kaalathin Arumaiyai song from Christian movie
devotionalJune 2019

Kaalathin Arumaiyai

Music
Lyrics

Kaalathin Arumaiyai Lyrics

காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில்
கண்ணீர் விடுவாயே
ஞாலத்தில் பரனுனை நாட்டின நோக்கத்தைச்
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்
மதியை யிழந்து தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ?
கதியாம் இரட்சண்ய வாழ்வைக் கண்டு நீ மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ?
இகத்தினில் ஊழியம் அகத்தியம் நிறைவேற
இயேசுனை அழைத்தாரல்லோ
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்காலமுடியும் இராக்காலத்திலென்ன செய்வாய்?
முந்தி எரேமியா அனனியாவுக் குரைத்த
முடிவை நீ யறியாயோ!
எந்தக்காலமும் சிரஞ்சீவியென் றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ