
Kirubai Ithey Deva
Kirubai Ithey Deva Lyrics
கிருபையிதே தேவக் கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்
ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவியப்பாதையிலே .. இயேசு பரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே
வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் - வைத்தியராய்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய்
நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் - பற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திருப்போம்
அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம்
ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கிறாரே வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார்