
Malairajan Thirukoil
Malairajan Thirukoil Lyrics
மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான அருட்பாடல் இசை கேட்குதே
மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான அருட்பாடல் இசை கேட்குதே
அபிஷேக மணம் காற்றில் அலைவீசுதே
அபிஷேக மணம் காற்றில் அலைவீசுதே
அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே
அய்யப்பன் பதம் தேடி மனம் ஓடுதே
மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான அருட்பாடல் இசை கேட்குதே
வாவென்று வரவேற்கும் ஐயன் மலை
வாழ் நாளில் கடைத்தோற்றம் அருளின் எல்லை
நாள் தோறும் அருள் வேண்டும் அடியார் உள்ளம்
மழைமேகம் போல் பொங்கும் கருணை வெள்ளம்
வாவென்று வரவேற்கும் ஐயன் மலை
வாழ் நாளில் கடைத்தோற்றம் அருளின் எல்லை
நாள் தோறும் அருள் வேண்டும் அடியார் உள்ளம்
மழைமேகம் போல் பொங்கும் கருணை வெள்ளம்
மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான அருட்பாடல் இசை கேட்குதே
ஓம் என்று குளிர்காற்று இசைபாடுதே
சபரிமலை மேகம் ஆனந்த நடமாடுதே
ஓம் என்று குளிர்காற்று இசைபாடுதே
சபரிமலை மேகம் ஆனந்த நடமாடுதே
நாம் வாழ நல்மார்க்கம் தெளிவாகுதே
ஆம் என்று அய்யப்பன் அருள் கூறுதே
நாம் வாழ நல்மார்க்கம் தெளிவாகுதே
ஆம் என்று அய்யப்பன் அருள் கூறுதே
மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான அருட்பாடல் இசை கேட்குதே
நோன்போடு சாஸ்தாவின் மலை நாடுவோம்
நம் வாழ்வில் அவன் பாதம் துணை தேடுவோம்
அடியாரின் அவன் யாவும் அவந்தானே ஆட்சி
அய்யப்பன் பெருமைக்கு அடியாரே சாட்சி
அடியாரின் அவன் யாவும் அவந்தானே ஆட்சி
அய்யப்பன் பெருமைக்கு அடியாரே சாட்சி
மலைராஜன் திருக்கோவில் மணியாடுதே
சுகமான அருட்பாடல் இசை கேட்குதே