Nee Unakku Sonthamallave song from Christian movie
devotionalJune 2019

Nee Unakku Sonthamallave

Music
Lyrics

Nee Unakku Sonthamallave Lyrics

நீயுனக்குச் சொந்தமல்லவே
மீட்கப்பட்ட பாவி
நீயுனக்குச் சொந்தமல்லவே
நீயுனக்குச் சொந்தமல்லவே
நிமலன் கிறிஸ்து
நாதர்க்கே சொந்தம்
சிலுவைமரத்தில் தொங்கி
மரித்தாரே – திருரத்தம் ரத்தம்
திரு விலாவில் வடியுது பாரே
வலிய பரிசத்தால் கொண்டாரே
வான மகிமை யுனக்கீவாரே
இந்த நன்றியை மறந்து
போனாயோ? யேசுவைவிட்டு
எங்கேயாகிலும் மறைந்து திரிவாயோ?
சந்ததமுனதிதயங் காயமும்
சாமி கிறிஸ்தினுடையதல்லவோ?
பழைய பாவத்தாசை
வருகுதோ? பசாசின்மேலே
பட்சமுனக்குத் திரும்ப வருகுதோ?
அழியும் நிமிஷத் தாசை காட்டியே
அக்கினிக்கடல் தள்ளுவானேன்?
பிழைக்கினும் அவர்க்கே
பிழைப்பாயே – உலகைவிட்டுப்
பிரியினும் அவர்க்கே மரிப்பாயே
உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்