
Nimishangal Nimishangal
Nimishangal Nimishangal Lyrics
நிமிஷங்கள் நிமிஷங்கள்
வாழ்க்கையின் நிமிஷங்கள்
ஒவ்வொன்றாய் ஓடி மறைந்துவிடும்
கனவுகள் ஆயிரம் மனதார கண்டு நீ
நினைவுகள் ஆகியே மறைந்திடுமே
நிமிஷங்கள் நிமிஷங்கள்
வாழ்க்கையின் நிமிஷங்கள்
துளிதுளி சாரலும் பெரு வெள்ளமாகும்
தனிதனியாகவே சேர்ந்துவிடும்
இளைப்பாறும் நாட்களும் விரைவாக வந்திடும்
கரைசேரும் முன்னே நினைத்திடுவாய்
நிமிஷங்கள் நிமிஷங்கள்
வாழ்க்கையின் நிமிஷங்கள்
இருளினில் ஒளிகாட்டும் பெருவாழ்வு ஈட்டும்
மறுமையில் உன்னையும் சேர்த்துவிடும்
இனிதான நேசரை கரம் கூப்பி சாற்றுவாய்
கனிவாக உன்னையே அழைக்கிறாரே
நிமிஷங்கள் நிமிஷங்கள்
வாழ்க்கையின் நிமிஷங்கள்