
Oopillatha Divya Anbe
Oopillatha Divya Anbe Lyrics
ஓப்பில்லாத திவ்விய அன்பே
மோட்சானந்தா தேவரீர்
எங்கள் நெஞ்சில் வாசம்செய்தே
அருள் பூர்த்தியாக்குவீர்
மா தயாள இயேசு நாதா
அன்பு மயமான நீர்
நைந்த உள்ளத்தில் இறங்கி
உம் ரட்சிப்பால் சந்திப்பீர்
உமது நல் ஆவி தாரும்
எங்கள் நெஞ்சு பூரிப்பாய்
உம்மில் சார நீரே வாரும்
சுத்த அன்பின் வடிவாய்
புhவ ஆசை எல்லாம் நீக்கி
ஆடியாரை ரட்சியும்
விசுவாசத்தைத் துவக்கி
முடிப்பவராய் இரும்
வல்ல நாதா எங்கள்பேரில்
மீட்பின் அன்பை ஊற்றுமே
விரைவாய் உம் ஆலயத்தில்
வந்து என்றும் தங்குமே
வானோர் போல நாங்கள் உம்மை
நித்தம் வாழ்த்திச் சேவிப்போம்
ஓய்வில்லாமல் உமதன்பை
பூரிப்பாய்க்கொண்டாடுவோம்
உந்தன் புது சிஷ்டிப்பையும்
சுத்த தூய்மையாக்குமேன்
உந்தன் திவ்ய ரட்சிப்பையும்
பூரணப்படுத்துமேன்
எங்கள் கிரீடம் உம்முன் வைத்து
அன்பில் மூழ்கிப் போற்றியும்
மேன்மைமேலே மேன்மை பெற்று
விண்ணில் வாழச்செய்திடும்