
Paathai Kaatum
Paathai Kaatum Lyrics
பாதை காட்டும் மா யெகோவா
பரதேசியான நான்
பலவீனன் அறிவீனன்
இவ்வுலோகம் காடுதான்
வானாகாரம்
தந்து என்னைப் போஷியும்.
ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை
நீர் திறந்து தாருமேன்
தீப மேக ஸ்தம்பம் காட்டும்
வழியில் நடத்துமேன்
வல்ல மீட்பர்!
என்னைத் தாங்கும் இயேசுவே.
சாவின் அந்தகாரம் வந்து
என்னை மூடும் நேரத்தில்
சாவின்மேலும் வெற்றி தந்து
என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்
கீத வாழ்த்தல்
உமக்கென்றும் பாடுவேன்