Paaviyaagave Vaaren song from Christian movie
devotionalJune 2019

Paaviyaagave Vaaren

Music
Lyrics

Paaviyaagave Vaaren Lyrics

பாவியாகவே வாறேன், பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்
பாவக்கறை போமோ என்
பாடால்? உன் பாடாலன்றிப்
போவதில்லை என்றே பொல்லாத
பாவியே நான்
பாவியாகவே வாறேன், பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்
நீ வா, உன் பாவம் என்னால்
நீங்கும் என்று சொன்னீரே;
தேவா, உன் வாக்கை நம்பி,
சீர்கேடன் நீசனும் நான்
பாவியாகவே வாறேன், பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்
பேய்மருள் உலகுடல்
பேராசையால் மயங்கிப்
போயும் அவற்றோடு
போரில் அயர்ச்சியாய் நான்
பாவியாகவே வாறேன், பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்
ஜீவ செல்வ ஞான
சீல சுகங்கள் அற்றேன்,
தாவென்று வேண்டிய
சாவில் சஞ்சரித்த நான்
பாவியாகவே வாறேன், பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்
துன்பங்கள் நீக்கி உன்னை
தூக்கி அணைப்பேன் என்றீர்
இன்ப வாக்குத்தத்தத்தை
இன்றைக்கே நம்பியே நான்
பாவியாகவே வாறேன், பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்
உன்னைச் சேர ஒட்டாமல்
ஊன்றிய தடை யாவும்
உன்னன்பால் நீங்கி நல் உயிர்
அடைந்தோங்கவே நான்
பாவியாகவே வாறேன், பாவம் போக்கும்
பலியாம் என் யேசுவே, வாறேன்