Pareer Kethsamane song from Christian movie
devotionalJune 2019

Pareer Kethsamane

Music
Lyrics

Pareer Kethsamane Lyrics

பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே
பாவி உனக்காய்
வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே
தேகமெல்லாம் வருந்தி
சோகமடைந்தவராய்
தேவாதி தேவன் ஏகசுதன்
படும் பாடு எனக்காகவே
அப்பா என் பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியாயினும் சித்தம்
செய்ய என்னை
தத்தம் செய்வேன் என்றாரே
ரத்தத்தின் வேர்வையாலே
மெத்தவும் நனைந்ததே
இம்மானுவேல் உள்ளம் உருகியே
வேண்டுதல் செய்தாரே