
Piranthar Piranthaar
Piranthar Piranthaar Lyrics
பிறந்தார், பிறந்தார்
வானவர் புவி மானிடர் புகழ்
பாடிட பிறந்தார்
மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்
மா தேவ தேவனே
மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்
மா தியாகியாய் வளர்ந்தார்
பாவ உலக மானிடர் மேல்
பாசம் அடைந்தவரே
மனக்காரிருளை எம்மில் நீக்கிடு மெய்
மாஜோதியாய் திகழ்ந்தார்
பொறுமை தாழ்மை அன்புருக்கம்
பெருந்தன்மை உள்ளவரே
மரணம் வரையும் தன்னை தாழ்த்தினதால்
மேலான நாமம் பெற்றார்
கந்தைத் துணியோ கர்த்தருக்கு
கடும் ஏழ்மைக் கோலமதோ
விலையேறப்பெற்ற உடை அலங்கரிப்பும்
வீண் ஆசையும் நமக்கேன்