
Poorana Vaazhkaiye
Poorana Vaazhkaiye Lyrics
பூரண வாழ்க்கையே!
தெய்வாசனம் விட்டு,
தாம் வந்த நோக்கம் யாவுமே
இதோ முடிந்தது!
பிதாவின் சித்தத்தை
கோதற முடித்தார்
தொல் வேத உரைப்படியே
கஸ்தியைச் சகித்தார்.
அவர் படாத் துக்கம்
நரர்க்கு இல்லையே
உருகும் அவர் நெஞ்சிலும்
நம்துன்பம் பாய்ந்ததே.