
Santhosam Ponguthey
Santhosam Ponguthey Lyrics
சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் பொங்குதே
சந்தோஷம் என்னில் பொங்குதே
இயேசு என்னை இரட்சித்தார்
முற்றும் என்னை மாற்றினார்
சந்தோஷம் பொங்கிப் பொங்குதே
வழி தப்பி நான் திரிந்தேன்
பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன்
அவர் அன்புக் குரலே
அழைத்தது என்னையே
அந்த இன்ப நாளில்
எந்தன் பாவம் நீங்கிற்றே
சத்துரு சோதித்திட தேவ
உத்தரவுடன் வருவான்
ஆனால் இயேசு கைவிடார்
தானாய் வந்து இரட்சிப்பார்
அந்த நல்ல இயேசு
எந்தன் சொந்தமானாரே
பாவத்தில் ஜீவிப்பவர்
பாதாளத்தில் அழிந்திடுவார்
நானோ பரலோகத்தில்
நாளும் பாடல் பாடிடுவேன்
என்னில் வாழும் இயேசுவோடு
என்றும் வாழுவேன்