
Thooya Thooya Thooyaa
Thooya Thooya Thooyaa Lyrics
தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
தேவரீர்க் கெந்நாளும் சங்கீதம் ஏறுமே
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!
தூய, தூய, தூயா! அன்பர் சூழ நின்று
தெய்வ ஆசனமுன்னர் தம் கிரீடம் வைப்பரே,
கேருபீம் சேராபீம் தாழ்ந்து போற்றப்பெற்று,
இன்றென்றும் வீற்றாள்வீர், அநாதியே!
தூய, தூய, தூயா! ஜோதி பிரகாசா,
பாவக் கண்ணால் உந்தன்
மாண்பைக் காண யார் வல்லோர்?
நீரே தூய தூயர், மனோவாக்குக் கெட்டா
மாட்சிமை, தூய்மை, அன்பும் நிறைந்தோர்,
தூய, தூய, தூயா! சர்வவல்ல நாதா!
வானம் ப+மி ஆழி உம்மை ஸ்தோத்திரிக்குமே,
தூய, தூய, தூயா! மூவரான ஏகா!
காருணியரே, தூய திரியேகரே!