
Thukkam Kondada
Thukkam Kondada Lyrics
துக்கம் கொண்டாட வாருமே,
பாரும்! நம் மீட்பர் மரித்தார்
திகில் கலக்கம் கொள்ளுவோம்
இயேசு சிலுவையில் மாண்டார்.
போர் வீரர், பூதர் நிந்தித்தும்,
மா பொறுமையாய் சகித்தார்
நாமோ புலம்பி அழுவோம்
இயேசு சிலுவையில் மாண்டார்.
கை காலை ஆணி பீறிற்றே,
தவனத்தால் நா வறண்டார்
கண் ரத்தத்தாலே மங்கிற்றே
இயேசு சிலுவையில் மாண்டார்.