
Thuyarutra Vendhare
Thuyarutra Vendhare Lyrics
துயருற்ற வேந்தரே,
சிலுவை ஆசனரே,
நோவால் வாடும் முகத்தை
இருள் திரை மூடிற்றே,
எண்ணிறந்த துனபம் நீர்
மௌனமாக சகித்தீர்.
பலியாக மரிக்கும்
வேளை வரும் அளவும்
மூன்று மணி நேரமாய்,
துணையின்றி மௌனமாய்
காரிருளில் தேவரீர்
பேயோடே போராடினீர்.
தெய்வ ஏசு மைந்தனார்,
அபிஷேக நாதனார்
“தேவனே, என் தேவனே,
என்தனை ஏன் கைவிட்டீர்?”
என்றுரைக்கும் என் வாசகம்
கேள் இருண்ட ரகசியம்