Ullamellam Uruguthaiya song from Christian movie
devotionalJune 2019

Ullamellam Uruguthaiya

Music
Lyrics

Ullamellam Uruguthaiya Lyrics

உள்ளமெல்லாம் உருகுதையா
உத்தமனை நினைக்கையிலே
உம்மையன்றி வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்று தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவர்
சொல்லடங்கா நேசத்தாலே
உம் சொந்த மாக்கிக் கொண்டீரே
எத்தன் என்னை உத்தமனாக்க
சித்தம் கொண்ட என் இயேசையா
எத்தனையோ துரோகம் நான் செய்தேன்
அத்தனையும் நீர் மன்னித்தீர்
இரத்தம் சிந்த வைத்தேனே நான்
அத்தனையும் என் பாவமன்றோ
கர்த்தனே உம் அன்புக்கீடாய்
நித்தம் செய்வேன் உம் சேவையே
வானமீதில் இயேசு ராஜன்
வேகம் வரும் நாளன்றோ
லோக மீதில் காத்திருப்போhர்
ஏகமாகக் கூடிட
தியாக ராஜன் இயேசுவை நாம்
முகமுகமாய்த் தரிசிக்க
ஆவலோடு ஏங்கும் தாசன்
சோகம் நீங்கும் நாளன்றோ?