Urakkam Thelivom song from Christian movie
devotionalJune 2019

Urakkam Thelivom

Music
Lyrics

Urakkam Thelivom Lyrics

உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
உலகத்தின் இறுதி வரை
கல்வாரி தொனிதான் மழை மாரிப் பொழியும்
நாள்வரை உழைத்திடுவோம்!
அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்
ஆவியில் அனலும் கொள்வோம்
அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து
வேற்றுமையின்றி வாழ்வோம்!
அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்
சரித்திரம் சாட்சி கூறும்
இரத்தச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றி
நாதனுக்காய் மடிவோம்!
கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும்
தரித்திரர் ஆனதில்லை
இராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர்
நஷ்டப்பட்டதில்லை!
உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்
உலர்ந்த எலும்புகளே
நீங்கள் அறியா ஒருவர் உங்கள்
நடுவில் வந்துவிட்டார்