
Vinnil Oar Natchathiram
Vinnil Oar Natchathiram Lyrics
விண்ணில் ஓர் நட்சத்திரம் கண்டேன்
அதை எண்ணி வியப்பு மிக கொண்டேன்
அதன் காரணம் என்னவென்று கேட்டேன்
தேவன் மானிடன் ஆனார் என்றறிந்தேன்
ஆ…ஆ…ஆ…
அந்த பாலன் இயேசு ராஜன்
அவர் பாதம் பணிவோம்
அந்த பாலன் இயேசு ராஜன்
அவர் பாதம் பணிவோம்
மந்தை காக்கும் மேய்ப்பர் சிலர் கண்டேன்
அவர் விந்தையான செய்தி சொல்ல கேட்டேன்
தேவ தூதர்கள் கூடி பாடிய பாடலையும்
இயேசுவை கண்டதையும் கேட்டேன்
ஆ…ஆ…ஆ…
ஒட்டகத்தில் மூவர் செல்ல கேட்டேன்
அதை திட்டமாய் அறிய அங்கு சென்றேன்
இயேசுவை தரிசித்த ஞானிகள் மூவர்
தங்கள் தேசம் திரும்புவதை கண்டேன்
ஆ…ஆ…ஆ…